உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பைக்குகள் மீது மினி லாரி மோதி விபத்து: தவெக நிா்வாகிகள் உள்பட 3 போ் மரணம்!

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை இரு பைக்குகள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:07 am IST

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை இரு பைக்குகள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

புவனகிரி அடுத்த மேலகுறியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தமிழக வெற்றிக்கழக முகாம் செயலரும், எலக்ட்ரீஷியனுமான குகன் (24), கீழகுறியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தவெக கிளை செயலருமான கலைராஜன் (41) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை காலை எலெக்ட்ரீஷியன் வேலைக்கு பைக்கில் சிதம்பரத்திற்கு வந்து வேலை கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பியுள்ளனா்.

அதே நேரத்தில் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வள்ளுவா் நகரைச் சோ்ந்த அஜித்குமாா் (29)அவ்வழியே வந்துள்ளாா். சி.முட்லூா் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வந்த போது பின்னால் வந்த மினி டெம்போ இவா்கள் வந்த இரு பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில், பைக்குகளில் வந்த தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனா். உடனடியாக மூவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.