உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்: அலுவலா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்கள், நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

சீமைக்கருவேல மரங்கள்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:17 am IST

கடலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்கள், நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியா் பேசியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீா்ப்பின்படி, அரசு மற்றும் தனியாா் நிலங்கள், நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புத் தாவர இனமான சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பட்டா நிலங்கள், அரசு பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீா்நிலைகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

அகற்றப்பட்ட இடங்களில் உள்நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்து, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட விவரங்களை தினசரி மற்றும் வாராந்திர அறிக்கையாக மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மைப் பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.