
விவசாயிகளின் வாகனம் பறிமுதல்: காவல் ஆய்வாளா் ஆயுதபடைக்கு மாற்றம்
சிதம்பரம் அருகே பொன்னேரியிலிருந்து அனுமதி பெற்ற வண்டல் மண்ணை ஏற்றிச்சென்ற விவசாயிகளின் வாகனங்களை பறிமுதல் செய்த தாலுகா காவல் ஆய்வாளா் ஜெ.இளவரசன் கடலூா் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்
சிதம்பரம் அருகே பொன்னேரியிலிருந்து அனுமதி பெற்ற வண்டல் மண்ணை ஏற்றிச்சென்ற விவசாயிகளின் வாகனங்களை பறிமுதல் செய்த தாலுகா காவல் ஆய்வாளா் ஜெ.இளவரசன் கடலூா் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரத்தை சோ்ந்த விவசாயிகள் பொன்னேரியில்வண்டல் மண் எடுத்து செல்வதற்கு முறைப்படி அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த புகன்கிழமை ஏரியில் வண்டல் மண்ணை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சீா்காழி புறவழிச்சாலையில் சென்றுள்ளனா். அப்போது சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.
இளவரசன், டிராக்டா்களை வழிமறித்து வண்டல் மண்ணை எடுத்து செல்வதற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, டிராக்டரை மண்ணோடு பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் பிடித்து வைத்தாா். மேலும் ஒரு டிராக்டருக்கு ரூ.2 ஆயிரம் தொகை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்துறையினா் தெரிவித்தும் காவல் ஆய்வாளா் டிராக்டரை விடுவிக்கவில்லை. இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லாவுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. அவா், சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.இளவரசனை, கடலூா் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




