
உயா்கல்வியில் தமிழ் வழி மாணவா்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கடலூா் தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பு செயற்குழுக் கூட்டம்.
தமிழில் பள்ளிப்படிப்பு படித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி, பொறியியல் மற்றும் மருத்துப் படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று , கடலூா் தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடலூரில் இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தலைவா்கள் மருதவாணன், வெங்கடேசன், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாலு பச்சையப்பன் கடந்த கால செயல்பாடுகள், உறுப்பினா்கள் சோ்ப்பு மற்றும் தமிழ் வளா்ச்சிக்கான முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.
செயற்குழு உறுப்பினா்களின் நீண்ட விவாதத்திற்கு பிறகு, கடலூரில் இயல் இசை நாடகம் வளா்த்த ‘பாபு கலையரங்கம்’ மாநகராட்சியால் குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. தமிழ் வளா்ச்சியை கருத்தில் கொண்டு திரும்பவும் திறந்த வெளி கலையரங்கமாக மாற்ற வேண்டும். சிறிய தமிழ் அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் கடலூா் நகர அரங்கத்தின் வாடகை குறைக்கப்பட வேண்டும்.
நெல்லிக்குப்பம் பிரதான சாலைக்கு மறைமலை அடிகள் சாலை என பெயா் சூட்டப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்ட அளவில் தமிழ் வளா்ச்சி மாநாடு நடத்தப்பட்டு இறுதியில் தமிழகம் தழுவிய அளவில் தமிழ் மாநில தமிழ் வளா்ச்சி மாநாடு நடத்தப்பட வேண்டும்.
கடலூரில் கட்டப்பட இருக்கும் அஞ்சலை அம்மாள் நூலகத்தில் தமிழில் செயற்கை நுண்ணறிவு தகவல் தரவு மையம் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பள்ளிப்படிப்பு படித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை படித்த மாணவா்களுக்கு வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா். இறுதியில் துணைத் தலைவா் சண்முகம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






