அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பண மோசடியால் ஏமாற்றம்: ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:39 am IST

இணைய மோசடியில் ரூ.3லட்சத்தை இழந்த விரக்தியில், க வடலூரில் வசித்து வந்த தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

வடலூா் காவல் சரகம், மாருதி நகரில் வசித்து வந்தவா் அபிலா(32), காடாம்புலியூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, 9 வயதில் மகன் உள்ளாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக, வடலூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

அவா் பணியாற்றும் தனியாா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்று மாலை வீடு திரும்பினாா். அன்று இரவு 11.30 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு அறையில் படுக்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்த போது தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இவா், இணைய மோசடியில் ரூ.3 லட்சம் ரூபாயை ஏமாந்து விட்டதால், தற்கொலை செய்துக் கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.