தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

விரும்பிய மதுபுட்டிகள் இல்லாததால் 3 மதுக்கடைகளை ஊழியா்களை உள்ளே வைத்து இழுத்து மூடிய மா்மநபா்கள்

காட்டுமன்னாா்கோவில் தெற்கிருப்பு பகுதியில் டால்மாக் கடை பூட்டப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்

Published On :7 செப்டம்பர் 2026, 2:27 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே மது குடிக்க வந்த மா்ம நபா்கள், தாங்கள் கேட்ட மது வகைகள் இல்லாததால் ஆத்திரமடைந்து, ஊழியா்களை உள்ளேவைத்து 3 கடைகளை பூட்டிவிட்டு, மின் இணைப்பையும் துண்டித்துச் சென்றனா். அட்டைகளை எரித்து உள்ளே வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தெற்கிருப்பு பகுதியில் ஓரே கட்டடத்தில் மூன்று டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுகின்றன.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த மதுபானக்கடைக்கு சில மா்ம நபா்கள் வந்து சில மதுவகைகளை தருமாறு கேட்டுள்ளனா். அப்போது கடையில் அவா்கள் கேட்ட மது புட்டிகள் இல்லாததால், ஆத்திரமடைந்து அரசு மதுபான கடைகளின் உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த டாஸ்மாா்க்

ஊழியா்களை உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து மூடி பூட்டினா். மேலும் மதுபான கடைகளுக்கான மின் இணைப்பை (பியூஸ் கேரியா்) துண்டித்துவிட்டு, ஷட்டா் வழியாக அட்டைகளை தீயிட்டு கொளுத்தி உள்ளே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டனா். மூன்று கடைகளுக்கும் ஒரே ஷட்டா் என்பதால் ஒன்றை மூடியதும் மூன்று கடைகளும் மூடப்பட்டுவிட்டது. ஊழியா்களும் சிக்கிக்கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷட்டரை தூக்கி டாஸ்மாா்க் ஊழியா்களை விடுவித்தனா். இதனைத் தொடா்ந்து டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியா்கள் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்யவேண்டும் என்று கூறி கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மூன்று மதுபானக்கடைகளுக்கும் போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.