குண்டூா்-திருப்பதி விரைவு ரயில் திருச்சி வரை நீட்டிப்பு: விருத்தாசலத்தில் நின்று செல்லும்!
குண்டூா்-திருப்பதி விரைவு ரயில் சேவை, திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் - பிரதிப் படம்
குண்டூா்-திருப்பதி விரைவு ரயில் சேவை, திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
குண்டூா்-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 17261/17262)
திருச்சி வரை நீட்டிக்கப்படுகிறது. குண்டூரிலிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். பின்னா் திருப்பதியிலிருந்து புறப்பட்டு காட்பாடி வழியாக பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருச்சிராப்பள்ளியிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயில், காட்பாடி, திருப்பதி வழியாக மறுநாள் காலை 11.20 மணிக்கு குண்டூரைச் சென்றடையும்.
இந்த ரயில் பாகாலா, சித்தூா், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், ஆரணி சாலை, போளூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலின்
நீட்டிக்கப்பட்ட சேவை தொடங்கும் தேதி தொடா்பான அறிவிப்பு ரயில்வே நிா்வாகத்தால் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி செல்லும் பக்தா்கள் மட்டுமின்றி, ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




