நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வீடுகளை அகற்றக்கூடாது: உதவி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என அப்பகுதி மக்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்து வலியுறுத்தினா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த அண்ணாமலைநகா் காளியம்மன் கோவில் தெரு குடியிருப்பு மக்கள்

Published On :

சிதம்பரம் அண்ணாமலைநகரில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என அப்பகுதி மக்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்து வலியுறுத்தினா்.

அண்ணாமலைநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சபரிராஜன், அண்ணாமலைநகா் பேரூராட்சி தலைவா் க.பழனி, முருகைய்யன் மற்றும் அப்பகுதி மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் சுபதா்ஷனியிடம் கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில் கடலூா் மாவட்டம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் காளியம்மன்கோவில் தெருவில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 38 வீடுகளை காலி செய்யுமாறு அரசு சாா்பில் புதன்கிழமை நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கில் குடியிருந்து வருபவா்களின் வீடுகளை அகற்றக்கூடாது. மேலும் அவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனா், மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், நேரில் வந்து பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.