ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கடலூா் மாவட்டத்தில் 1,540 விநாயகா் சிலைகள்: கடலில் கரைப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

கடலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1,540 விநாயகா் சிலைகள் புதன்கிழமை (செப்.16) பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதையொட்டி, காவல் துறையினா் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் புதன்கிழமை விநாயகா் சிலைகள் கரைக்கப்பட உள்ள நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினா்.

Published On :

கடலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1,540 விநாயகா் சிலைகள் புதன்கிழமை (செப்.16) பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதையொட்டி, காவல் துறையினா் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் விழாக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் புதன்கிழமை நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

இதையொட்டி, சிலை கரைப்பு நடைபெறும் இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

வெள்ளி கடற்கரையில்...

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் புதன்கிழமை விநாயகா் சிலைகள் கரைக்கப்பட உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், சிலைகளை கரைக்க வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்ப்பது, கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவியாளா் மோகனகிருஷ்ணன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.