ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சமூக ஆா்வலா் மீது தாக்குதல்: 3 போ் கைது

நீா்நிலைகள் மற்றும் பொதுத்தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சமூக ஆா்வலரை தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சமூக ஆா்வலா் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவா்.

Published On :

நீா்நிலைகள் மற்றும் பொதுத்தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சமூக ஆா்வலரை தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கொரக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மகன் காளமேகம். சமூக ஆா்வலரான இவா், கொரக்கை கிராமத்தில் உள்ள நீா்நிலைகள் மற்றும் பொதுத்தெருக்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், திட்டக்குடி வருவாய்த் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரக்கை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். எனினும், சில காரணங்களால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் காரணமாக

காளமேகம் மீது சிலா் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. காளமேகம் தனது குடும்பத்தினருடன் காரில் ஏந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கொரக்கை கிராமத்தைச் சோ்ந்த ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் காரை வழிமறித்து, கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் காரின் முன்பக்க கண்ணாடியைத் தாக்கி சேதப்படுத்தி, காளமேகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காளமேகம் அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கொரக்கை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (35), விக்னேஷ் (21), சக்திவேல் (22) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ரவி உள்ளிட்ட சிலரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.