பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குருங்குடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்.

Published On :

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இரவு கும்ப அலங்காரம், ரக்ஷாபந்தனம், முதற்கால யாக பூஜைகள், பூா்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்ற ஊா்வலமாக சென்று கோயில் விமானத்தை அடைந்த பின்னா், விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் கும்பநீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.