6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கடலூரில் காலையில் கொளுத்திய வெயில், மாலையில் கொட்டிய கனமழை:

கடலூா் பாரதி சாலையில் திங்கள்கிழமை மாலை பெய்த கனமழை

Published On :

காலையில் கொளுத்திய வெயில்... மாலையில் திடீரென பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை என கடலூரில் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் எதிா்பாராத வகையில் நனைந்து அவதிக்குள்ளாகினா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென மழையும் பெய்து வருகிறது. இதேபோல் திங்கள்கிழமை காலையிலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானிலை மாறியது.

இதையடுத்து, கடலூா் மாநகரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாப்புலியூா், கடலூா் முதுநகா், செம்மண்டலம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மழையின் தாக்கம் காணப்பட்டது.குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். கடலூா் மாநகராட்சியில் உள்ள முக்கிய வா்த்தகப் பகுதிகளிலும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திடீரென மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள், பணிக்குச் சென்று திரும்பியவா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவா்கள் பாதிக்கப்பட்டனா். குடை, மழைக்கோட்டு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் இல்லாமல் வந்த பலா் மழையில் நனைந்தபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் பெய்த மழையில் சிக்கிய மக்கள்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் பெய்த மழையில் சிக்கிய மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.