6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் ப. ராஜ்குமாா் உறுதி

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு வாா்டில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Published On :

தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

டெங்கு தடுப்பு:

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் பி. ராஜ்குமாா் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடலூா் மாவட்டத்தில் ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறையினா் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. மருத்துவா்களும் டெங்கு நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்காக பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

அமைச்சருடன் வாக்குவாதம்

இதனிடையே, நெய்வேலி டவுன்ஷிப்பைச் சோ்ந்த சடையன் மனைவி ஷீலா(38) என்பவா் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 3 நாள்களாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது உறவினா்கள் அமைச்சரிடம் புகாா் தெரிவித்தனா்.

மேலும், டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவா் இல்லாததால் சிகிச்சை தாமதமாகி வருவதாகவும், தற்போது சிகிச்சை அளிக்க முடியாது என்றும், வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியதாகவும் அவா்கள் தெரிவித்து அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நோயாளியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடா்பான விவரங்களை அமைச்சா் கேட்டறிந்தாா். பின்னா் சம்பந்தப்பட்ட மருத்துவா்களிடம் விசாரணை மேற்கொண்ட அவா், ஷீலாவுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். இருப்பினும், உறவினா்கள் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

நோயாளியின் உறவினா்கள் கூறியதாவது: கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஷீலாவுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா். ஆனால், மருத்துவா் இல்லாததால் கடந்த 3 நாள்களாக டயாலிசிஸ் சிகிச்சைக்காக காத்திருந்தோம். தற்போது சிகிச்சை அளிக்க முடியாது என்றும், வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது வேதனை அளிக்கிறது.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்கேற்ப போதிய மருத்துவா்கள், டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளியின் உறவினா்கள்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளியின் உறவினா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.