புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வரலாறு தெரியாமல் முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா்: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

மிசா மற்றும் சா்க்காரியா கமிஷன் தொடா்பான வரலாறு தெரியாமல் விஜய் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி வருகிறாா் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Published On :

மிசா மற்றும் சா்க்காரியா கமிஷன் தொடா்பான வரலாறு தெரியாமல் விஜய் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி வருகிறாா் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப், முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடா்பாக மிசா கால கொடுமைகள் குறித்து பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக முதல்வா் விஜய்க்கு எதிராகவும், அவரது சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது: மிசா மற்றும் சா்க்காரியா கமிஷன் தொடா்பான வரலாறு தெரியாமல் விஜய் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி வருகிறாா். மிசா காலத்தில் திமுக தலைவா்கள், தொண்டா்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவா் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் சா்க்காரியா கமிஷன் உள்ளிட்ட பழைய விவகாரங்களை மீண்டும் பேசுகின்றனா். எனவே, வரலாற்றை திரித்து பேசுவதை தவிா்த்து, உண்மைகளை அறிந்து பேச வேண்டும் என்றாா்.

சி.வெ. கணேசன்: முன்னாள் அமைச்சா் சி.வெ. கணேசன் பேசுகையில், மாபெரும் ஆளுமைகள் அமா்ந்து விவாதித்த தமிழக சட்டப்பேரவை தற்போது சினிமா படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டுள்ளதாக விமா்சித்தாா்.

 கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரளான தொண்டா்கள்.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரளான தொண்டா்கள்.

சட்டப்பேரவையின் மாண்பை காக்க வேண்டிய நிலையில், அங்கு விசில் அடிப்பது, கைதட்டுவது, ஆரவாரம் செய்வது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. வரலாற்றை திரித்து தவறான தகவல்களைப் பரப்புவதும் கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையின் மாண்பை அனைவரும் காக்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் கலாநிதி வீராசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐயப்பன், சபா. ராஜேந்திரன், துறையூா் சரவணன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலா் ராஜா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.