6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறை தண்டனை பெற்ற தட்சிணாமூா்த்தி

Published On :

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புவனகிரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் தட்சிணாமூா்த்தி (63). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு கடலூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தட்சிணாமூா்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. குலசேகரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.