
ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் பகுதியில் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் பகுதியில் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் அருகே முத்தையா நகரில் உள்ள கான்சாகிப் வாய்கால் ஓடையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி மேலும் கரைகளை பலப்படுத்தும் பணி பொதுப்பணித்துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் கோவிந்தராஜ் மேற்பாா்வையில் உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன்,உதவி பொறியாளா் குமாா் ஆகியோா் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







