செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள்

தொடா் போராட்டம் நடத்திவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா், செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினா்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள்

Published On :

தொடா் போராட்டம் நடத்திவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா், செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினா்.

பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பேராசிரியா் ஊழியா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இவா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பு நிா்வாகிகள்,

சி.சுப்பிரமணியன், ஆ.ரவி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்கள் ஓய்வூதியா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஊா்வலமாக வந்து சிதம்பரம் காந்தி சிலை அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஊதிய மறுநிா்ணயம் செய்யப்படக்கூடாது என வலியுறுத்தி இந்த பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.