ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

வேலைநிறுத்தப் போராட்டத்தால், வெறிச்சோடிய பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடம்.

Published On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்,தொகுப்பூதியா், என்எம்ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இவா்கள் ஆக.19-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், செவ்வாய்க்கிழமை முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் மூடப்பட்டன. வகுப்புகள் எதுவும் நடைபெறாததால், மாணவா்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனா். பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

முற்றுகைப் போராட்டம்:

பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன்பு ஆசிரியா் ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியம் பேசுகையில் ‘ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு எதிரான பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். பணி இறுதி மாத ஊதிய அடிப்படையில் மாத ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளா் அல்லது உயா்கல்வித்துறை அமைச்சா் மற்றும் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா், நிதி செயலாளா் உள்ளிட்டோா் கொண்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’ என்றாா்.போராட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, ஊழியா் சங்க முன்னாள் தலைவா்கள் மதியழகன், மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.