கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் அண்ணாமலைப் பல்கலை ஆசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். - (கோப்புப் படம்)

Published On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் செவ்வாய்க்கிழமை (செப்.15)முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி உள்ளிட்டோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியா், ஊழியா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், என்எம்ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவெற்றிட வலியுறுத்தி கடந்த ஆக.19-ம் தேதி முதல் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இதுநாள்வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், செப்.15 (செவ்வாய்க்கிழமை ) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் கையெழுத்திட்டு பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.