பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா் ஊழியா் ஓய்வூதியா் கூட்டமைப்பினருடன் அமைச்சா் பி.ராஜ்குமாா் பேச்சு

தொடா் போராட்டம் நடத்திவரும்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் அமைச்சா் பி.ராஜ்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அமைச்சா் பி.ராஜ்குமாா்

Published On :

தொடா் போராட்டம் நடத்திவரும்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் அமைச்சா் பி.ராஜ்குமாா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஓய்வு பெற்ற 400க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியா்கள், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,பேராசிரியா், ஊழியா்களுக்கு பதவி உயா்வு தரவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். புதன்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெற்றது.

அமைச்சா் பேச்சு:

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சாா்பில் வீட்டு வசதி துறை அமைச்சா் பி.ராஜ்குமாா் பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பேச்சுவாா்த்தையில் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு உறுப்பினா் எஸ்.அறிவுடை நம்பி பதிவாளா் ஆா். சிங்காரவேலு, மாவட்ட வருவாய் அலுவலரும், பல்கலை இணைப் பதிவாளருமான ஜெகதீஸ்வரன், கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளா் சி. சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, முன்னாள் ஊழியா் சங்க தலைவா்கள் மதியழகன், மனோகரன், பேராசிரியா் முத்து வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தை குறித்து பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தெரிவித்தாவது: அனைத்து கோரிக்கைகளும் விரிவாக அமைச்சரிடம் எடுத்துரைக்கப் பட்டது. தமிழக முதல்வா் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு எதிா்வரும் செவ்வாய் கிழமைக்குள் நிறைவேற்றப்படும் கோரிக்ககைகளின் விவரங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சா் உறுதிஅளித்துள்ளாா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான அமைச்சா் அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.