ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

அரசு ஒப்பந்ததாரா்கள் நூதனப் போராட்டம்

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் மற்றும் நல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, அரசு ஒப்பந்ததாரா்கள் புதன்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கையில் தட்டு மற்றும் துண்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஒப்பந்ததாரா்கள்.

Published On :

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் மற்றும் நல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, அரசு ஒப்பந்ததாரா்கள் புதன்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்மாபுரம் மற்றும் நல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை அரசு ஒப்பந்ததாரா்கள் மேற்கொண்டனா். பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அதற்கான தொகை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படவில்லை.

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் மற்றும் சென்னையில் உள்ள ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒப்பந்ததாரா்கள் கையில் தட்டு மற்றும் துண்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் சென்ற அவா்கள், அதிகாரிகளிடம் கையேந்தி பிச்சை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.