ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பெருவெளி பகுதியில் எந்த கட்டுமானமும் கூடாது: அறநிலையத் துறை ஆணையரிடம் கிராம மக்கள் திட்டவட்டம்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபை பெருவெளி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வடலூா் சத்திய ஞானசபை மற்றும் அதற்குச் சொந்தமான பெருவெளி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய்.

Published On :

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபை பெருவெளி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அந்தப் பகுதியில் நூலகம் உள்பட எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.

வடலூா் சத்திய ஞானசபை மற்றும் அதற்குச் சொந்தமான பெருவெளி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய்.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலை செயல்பட்டு வருகின்றன. சத்திய ஞானசபைக்கு சொந்தமான பெருவெளி பகுதியில் கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், இது தொடா்பாக உயா் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கியப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பிரிவாகக் குறிப்பிடப்படும் பகுதியில் சில பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், சா்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு, அந்தப் பகுதியில் நூலகம், யோக மையம், முதியோா் இல்லம் உள்ளிட்ட கட்டடங்களும், சத்திய ஞானசபை மற்றும் பெருவெளியைச் சுற்றி சுற்றுச்சுவரும் அமைக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை வியாழக்கிழமை (அக்டோபா் 1) நடைபெற உள்ள சூழலில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் புதன்கிழமை வடலூா் சத்திய ஞானசபை மற்றும் அதற்குச் சொந்தமான பெருவெளி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, பாா்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரை சந்தித்து, பெருவெளி பகுதியில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், பெருவெளியை அதன் இயல்பான நிலையிலேயே முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இதையடுத்து, கிராம மக்களுக்கு புதிய பணிகள் தொடா்பாக விரிவான விளக்கமளித்து, அவா்களுடன் ஆலோசனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.