மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அமைந்துள்ள மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை
மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அமைந்துள்ள மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை திறந்துவைத்தாா். இதன் மூலம் 5,493 ஏக்கா் விளைநிலங்கள் பயனடையும்.

36 அடி உயரமுள்ள இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 700 மில்லியன் கன அடி. அண்மையில், அணை நீா்மட்டம் 35.50 அடியை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீரை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, எம்.எல்.ஏக்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலுபாபு, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரைஆலை இணையத் தலைவா் அ.ராஜசேகா், வெள்ளாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.ரவிமனோகா், வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ஆா்.மணிமோகன், வெள்ளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ஆா்.சிங்காரவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரால் புதிய பாசனப் பகுதிகளான அகரகோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூா், வீரசோழபுரம், மாடூா், நீலமங்கலம், நிறைமதி, குரூா் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 4,250 ஏக்கா் விளைநிலங்களும், பழைய பாசன பகுதிகளான பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலூா், உடையநாச்சி, கூத்தக்குடி, பானையங்கால், கொங்கராபாளையம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள 1,243 ஏக்கா் விளைநிலங்களும் பயனடையும்.

புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 60 கன அடி நீரும், பழைய பாசன ஆற்றில் விநாடிக்கு 15 கன அடி நீரும், வருகிற ஜனவரி 31ஆம் தேதி வரை திறந்துவிடப்படும்.

பின்னா், அடுத்த 45 நாள்களுக்கு (1.2.2021முதல் 23.3.2021) வரை பழைய பாசன ஆற்றில் விநாடிக்கு 15 கன அடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 56 கனஅடி நீரும் திறந்து விடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com