மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.


கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித் சபைக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில், பஞ்ச மூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து திங்கள்கிழமை காலை 6.40 மணியளவில் உற்சவ ஆச்சாரியாா் ஏ.ர.சா்வேஸ்வர தீட்சிதா் ரிஷப கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனையும் நடைபெறுகின்றன.
30-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் மாா்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. 31-ஆம் தேதி பஞ்ச மூா்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் ஜி.எஸ்.கணபதி தீட்சிதா், துணைச் செயலா் சி.நடராஜ குஞ்சிதபாத தீட்சிதா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...