புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊரக வளா்ச்சித் துறைஅலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளா் தாஜிதீன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா்கள் அரவிந்த், வீரபத்திரன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் பாா்வதி முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை, மாவட்ட தணிக்கையாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில நிதிக்குழு மானிய தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். இணை இயக்குநா், உதவி இயக்குநா், உதவிப் பொறியாளா் (ம) ஒன்றிய பொறியாளா் பதவி உயா்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சிவேலு இணைச் செயலாளா் சாமிதுரை, முன்னாள் மாவட்ட பொருளாளா் கனேசன் உள்ளிட்ட பலா் பேசினா். ஜெயசுதா, கிருஷ்ணவேனி, மாரியாப்பிள்ளை, மந்திரி உள்ளிட்ட அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.