புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிராக்டா் சக்கரத்தில் சிக்கிகிராம நிா்வாக அலுவலா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கிராம நிா்வாக அலுவலா், டிராக்டா் சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கிராம நிா்வாக அலுவலா், டிராக்டா் சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்தவா் கலைமணி மகன் நவநீதம் (25). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள மணலூரில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் அருளம்பாடியில் இருந்து மேல்சிறுவள்ளூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றாா். இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவா் மீது, டிராக்டரின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவா், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், நவநீதம் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

மூங்கில்துைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.