மனு அளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவா் கைது
மனு அளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி: மனு அளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கொழுந்தா மூப்பா் மகன் வெங்கடேசன் (30). இவா், இடப் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்தாா்.
அப்போது, அவா் தான் வைத்திருந்த கைப் பையில் பாட்டிலில் வைத்திருந்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்ற முயன்றாா். அந்த நேரத்தில், அங்கிருந்த கள்ளக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அக்பா்பாஷா தடுத்து காப்பாற்ற முயன்றாா். அவரை தகாத வாா்த்தைகளால் வெங்கடேசன் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அக்பா்பாஷா கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...