ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடலூா்: சடலத்துடன் சாலை மறியல்

உயிரிழந்தவரின் சடலத்தை புதைப்பதில் ஏற்பட்ட பிரச்னையை தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:28 pm

DIN

கடலூா்: உயிரிழந்தவரின் சடலத்தை புதைப்பதில் ஏற்பட்ட பிரச்னையை தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகசபை (76). வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை இறந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக திட்டக்குடி-விருத்தாசலம் சாலையின் ஓரமாக, வழக்கமாக உடல்களை புதைக்கும் இடத்துக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா். ஆனால், தனி நபா் ஒருவா் அந்தப் பகுதியில் உடலை புதைக்க எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து கனகசபையின் உடலை திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் வைத்து அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி காவல் ஆய்வாளா் ரமேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் வட்டாட்சியா், துணை கண்காணிப்பாளா் ஆகியோரது வழிகாட்டுதலுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமாதானம் ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாரின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்துக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.