நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.82 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் மொத்தம் ரூ.82.80 லட்சம் பறிமுதல்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:39 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் மொத்தம் ரூ.82.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.18,15,920, ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ.33,32,790, சங்கராபுரம் தொகுதியில் ரூ.17,11,590, கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.13,40,500 என மொத்தம் ரூ.82,00,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்தவா்களிடம் உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.2,81,790, சங்கராபுரம் தொகுதியில் ரூ.7,25,350 விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உளுந்தூா்பேட்டைதொகுதியில் 210 கொடிகள், 95 டி-ஷா்ட்டுகள்,ரூ.1.77 லட்சம் மதிப்பிலான சுமாா் 30 மெட்ரிக் டன் கொள்ளவில் 666 யூரியா பைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.