நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மைய அலுவா்களுக்கு 3-ஆவது சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:39 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மைய அலுவா்களுக்கு 3-ஆவது சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளின் பொது பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே, உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளின் பொது பாா்வையாளா் இந்து மல்கோத்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) டி.சுரேஷ், தோ்தல் இரா.சக்திவேல், தனி வட்டாட்சியா் (தோ்தல்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.