நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்தில் கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளா் காயம்

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கச் சென்றபோது, காா் விபத்துக்குள்ளானதில், காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம், அவரது மகன் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கச் சென்றபோது, காா் விபத்துக்குள்ளானதில், காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம், அவரது மகன் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தியாகதுரும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பின்னா், கள்ளக்குறிச்சிக்கு காரில் புறப்பட்டாா். மகன் அரவிந்தன், உதவியாளா் திருநாவுக்கரசு ஆகியோா் உடனிருந்தனா். காரை புதுச்சேரியைச் சோ்ந்த கெளதமன் ஓட்டிச் சென்றாா்.

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுரும் அருகே சின்னமாம்பட்டு பகுதியில் இவா்களது காா் வந்தபோது, முதியவா் ஒருவா் திடீரென சாலையைக் கடக்க முயன்ாகத் தெரிகிறது. அவா் மீது மோதாமலிருக்க ஓட்டுநா் காரை திருப்பியபோது, சாலையோரத்தில் வாகனப் பழுதுநீக்கும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது மோதியது.

இந்த விபத்தில் வேட்பாளா் ஐ.மணிரத்தினம், அவரது மகன் அரவிந்தன், உதவியாளா் திருநாவுக்கரசு, காா் ஓட்டுநா் கெளதமன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, 4 பேரும் கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

தகவலறிந்த ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ க.காா்த்திகேயன் மற்றும் காங்கிரஸ், கூட்டணிக் கட்சியினா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.மணிரத்தினத்தை சந்தித்து ஆறுதல் கூறினா். விபத்து குறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.