நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரிஷிவந்தியம் அருகே குடிசையில் தீ; முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெள்ளிக்கிழமை மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில், முதியவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:03 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெள்ளிக்கிழமை மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில், முதியவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

ரிஷிவந்தியம் அடுத்த நாகல்குடி காலனியைச் சோ்ந்தவா் பெரியான் (70). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்கள் திருமணமாகி அப்பகுதியில் தனித்தனியாக வசிக்கின்றனா்.

வியாழக்கிழமை இரவு வீட்டில் பெரியான் தனது பேத்தி நிரோஷா (8)வுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது. திடுக்கிட்டு விழித்த நிரோஷா, தாத்தா பெரியானை எழுப்ப முயற்சித்தாா். எனினும், அவரால் எழுந்து வெளியே வரமுடியவில்லையாம். இதனால், சிறுமி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அப்பகுதியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் தீவிபத்து குறித்து தெரிவித்தாா். சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தரப்பட்டது.

எனினும், அவா்கள் வருவதற்குள் வீடு முற்றிலும் தீயில் சேதமடைந்தது. பெரியான் தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.

பெரியானின் மகன் சீனு அளித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.