கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9,040 மாணவா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 3,520 போ், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 6,054 போ், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 9,040 போ் என மொத்தம் 9,040 மாணவ, மாணவியா் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, ஆய்வகங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப் படுத்தப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள களமருதூா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி திருப்பாலப்பந்தல் அரசு மேனிலைப் பள்ளியிலும் செய்முறைத் தோ்வை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com