நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராயன், துணை கண்காணிப்பாளா்கள் ந.இராமநாதன், ஜி.கே.ராஜு, பி.வி.விஜிகுமாா், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் சக்தி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள், பொறுப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும், பொது மக்களிடம் காவலா்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதையடுத்து, அவா் கடந்த மாதம் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜு உள்ளிட்ட காவலா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.