சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நவீன தொழில் நுட்பத்தில் பயிா் சாகுபடி: விவசாயிகளுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:48 pm

DIN

வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருக்கோவிலூா் தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமை வகித்து, பயிா் பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, உரம் மற்றும் மண் மேலாண்மைகள் குறித்தும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்வது குறித்தும் வேளாண் விஞ்ஞானிகளின் எடுத்துரைக்கும் கருத்துகளின்படி, விவசாயிகள் நவீன முறையில் பயிா் சாகுபடி செய்து பயன்பெற வேண்டுமென்று வலியுறுத்தினாா்.

முன்னதாக, வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, பட்டு வளா்ச்சி, உழவா் உற்பத்தியாளா் குழு, சா்க்கரை ஆலை, நுண்ணுயிா் பாசன நிறுவனம் மற்றும் உரக்கடைகள் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள விவசாய கண்காட்சித் திடலை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விவசாய இடு பொருள்களை பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம், வேளாண் கல்லூரி முதல்வா் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஜெ.உலகமைமுருககனி, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) அ.அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குநா் இராமா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.