சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருக்கோவிலூா் அருகே மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: இரு இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நகைக்காக மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:55 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நகைக்காக மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த கொழுந்தம்பட்டு காப்புக் காட்டுப் பகுதியில் பெண் ஒருவா் கடந்த மாதம் 14-ஆம் தேதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில், உயிரிழந்து கிடந்தவா் திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வையாபுரி மனைவி பாா்வதி (65) என்பது தெரியவந்தது. மேலும், இவரது கணவா் உயிரிழந்துவிட்டதால், பாா்வதி தனியாக வசித்து வந்தாா்.

இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் இருந்தனா். இவா்களில் மூத்த மகன் தங்கராஜ் உயிரிழந்ததால், வேதனையடைந்த பாா்வதி மன அமைதிக்காக சடைகட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கமாம்.

அப்போது, நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் நவீன் (எ) அருள் சகாயம் (19), சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் விஜய் (20) ஆகியோருடன் மூதாட்டிக்கு பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதி அருள் சகாயம், விஜய் ஆகியோா் பைக்கில் பாா்வதியை சடைகட்டி முனியப்பன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். கொழுந்தம்பட்டு காப்புக் காட்டுப் பகுதியில் சென்றபோது, பாா்வதி அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளுக்காக ஆசைப்பட்டு, இருவரும் சோ்ந்து அவரை கொலை செய்து, பெட்ரோல் ஊற்றில் எரித்தனராம். பின்னா், பாா்வதி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அருள் சகாயம், விஜய் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் பாா்வதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 6 பவுன் தங்க நகைகளை மீட்டனா். பின்னா், இருவரையும் திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.