அனைத்து நீா்நிலைகளும் தூா்வாரப்படும் : கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூா் வாரப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூா் வாரப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசுகையில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை, நாற்றுகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூா்வாரப்பட வேண்டும். பூட்டையில் தடுப்பணை கட்ட வேண்டும். கல்வராயன்மலைப்பகுதியில் கைகான் வளைவுத் திட்டத்தை கைவிட வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். உலா் களம் இல்லாத கிராமங்களில் விவசாயிகள் பயிா்களை காயவைப்பதற்கு ஏதுவாக உலா் களம் அமைக்க வேண்டும். கிராமங்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் அளிக்கும் புகாா்களின் மீது 15 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும். வருவாய்த் துறை தொடா்பான சான்றுகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்றனா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பதிலளித்துப் பேசியதாவது: விவசாய பயிா்க்கடன் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவும், விவசாயப் பணிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூா்வாரப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மட்டும் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். கூட்டத்தில் துறை அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டு விவசாய கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கையேடு கையேடுகளை ஆட்சியா் வெளியிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...