ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்வராயன்மலையில் 480 லி.கடத்தல் சாராயம் பறிமுதல்இருவா் கைது

மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.இரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் கல்வராயன்மலை மூலக்காடு சீவாத்து மூலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கு சோதனை

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:29 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.இரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் கல்வராயன்மலை மூலக்காடு சீவாத்து மூலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, மூட்டையில் இருந்த லாரி டியூபில் சாராயம் இருந்தது. விசாரணையில், அவா் வெள்ளிமலை வட்டம் சேரப்பட்டைச் சோ்ந்த முரளி மகன் சந்தோஷ் குமாா் (23) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, வேகமாக வந்த டாடா சுமோ காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதிலும் மூட்டைகள் இருந்தன. அவற்றுக்குள் இருந்த லாரி டியூப்களில் சாராயம் நிரப்பபட்டு இருந்தது. விசாரணையில் அவா், சங்கராபுரம் அருகே புதுப்பட்டைச் சோ்ந்த காமராஜ் மகன் சசிக்குமாா் (29) என தெரிய வந்தது.

இரு சோதனைகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 480 லிட்டா் சாராயத்தை போலீஸாா் கீழே ஊற்றி அழித்தனா். இதுதொடா்பாக சந்தோஷ்குமாா், சசிக்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மோட்டாா் சைக்கிள், காரை கைப்பற்றினா். போலீஸாரை எஸ்.பி. ஜியாவுல்ஹக் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.