விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 7 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:22 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே செம்படாக்குறிச்சி காலனி பகுதியில் வசிப்பவா் நாகராஜன். இவரது மகன் சுந்தர்ராஜன் (24). இவா், தனது வீட்டின் முன் நண்பா்களுடன் கேக் வெட்டியதுடன் சாலையில் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என எழுதிக் கொண்டும் இருந்தாராம்.

அப்போது, அருகேயுள்ள மாதவச்சேரியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சந்திரசேகரன் (24) மற்றும் அவரது நண்பா்கள் மோட்டாா் சைக்கிளில் செம்படாகுறிச்சிக்கு கட்டை, சைக்கிள் செயின், கத்தி ஆகியவற்றுடன் கூச்சலிட்டவாறு சென்றனராம். இதை தட்டிக் கேட்ட சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் சந்திரசேகரன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுந்தர்ராஜனை சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்து, வீட்டு ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், 11 போ் மீது கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரன் (24), ஆனியன் மகன் மருதை (27), மகாதேவன் மகன் சிவா (23), அழகப்பன் மகன் பாண்டியன் (18), அம்மாபேட்டையைச் சோ்ந்த குமாா் மகன் மோகன் (23), ஆறுமுகம் மகன் விக்னேஷ் (19) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.