நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பாளா்கள் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற்ற வாகனத்தில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அனுமதிக் கடிதத்தை வாகனத்தின் இருபுறமும் ஒட்டி வைத்திருக்க வேண்டும்.

அனுமதி பெறாமல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.