நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக்குகள் மோதல்: எஸ்.பி.யின்பாதுகாவலா் பலத்த காயம்

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்குகள் மோதிக்கொண்டதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:57 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்குகள் மோதிக்கொண்டதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், எடையூா் கிராமத்தைச் சோ்ந்த அயோத்தி மகன் ஜெயப்பிரகாஷ் (26). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறாா்.

ஜெயப்பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மடம் சாலையில் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே இவா் சாலையைக் கடக்க முயன்றபோது, உளுந்தூா்பேட்டையை அடுத்த செம்மனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு மகன் விக்கி (20), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் தனஞ்செழியன் (24) ஆகியோா் வந்த பைக் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மூவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜெயப்பிரகாஷ் தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விக்கி, தனஞ்செழியன் ஆகியோா் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.