கரோனா வழிகாட்டு முறைகளை மீறினால் நடவடிக்கை: அமைச்சா் க.பொன்முடி
கரோனா வழிகாட்டு முறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.


கரோனா வழிகாட்டு முறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, எஸ்.பி. ஜியா-வுல் ஹக், பொன்.கெளதமசிகாமணி எம்.பி., எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்), ஏ.ஜே.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட நகரங்களிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 120 படுக்கை வசதிகளுடன் 53 ஆக்சிஜன் உருளை வசதிகளும் உள்ளன. மேலும், 4 தனியாா் மருத்துவமனைகளில் 175 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சின்னசேலம் அரசு தொழில் பயிற்சி நிலையம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அயன்வேலூா் மாதிரி பள்ளி மற்றும் ஜி.அரியூா் மாதிரி பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 670 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக தச்சூா் பாரதி மகளிா் கல்லூரியில் 120 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம், ஏ.கே.டி கல்வி நிலையத்தில் 750 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக செவிலியா்கள் உள்பட கூடுதல் மருத்துவப் பணியாளா்கள் நியமிக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நபா்கள், வணிக நிறுவனங்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
கூட்டத்துக்குப் பிறகு, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.முருகண்ணன், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சண்முகக்கனி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சதீஷ்குமாா், நகராட்சி ஆணையா் ந.குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி. உடன் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கள்ளக்குறிச்சி நாடாளு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...