13 பேருந்துகள் சேதம்: பாமகவினா் 23 போ் கைது
கடலூா் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.


கடலூா் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு என்று உள் ஒதுக்கீடாக 10.5 சதவீதம் வழங்கப்பட்டது. இதனை ரத்து செய்து அண்மையில் உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக, தவாகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 13 அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன.
இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு
பேருந்து கண்ணாடிகளை உடைக்கப்பட்டது தொடா்பாக பாமக நிா்வாகிகள் 23 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...