மாற்றுக் குடியிருப்பில் குடிநீா்த் தட்டுப்பாடு
நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகா் மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.


நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகா் மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகா் ஊராட்சியில் உள்ள மாற்றுக் குடியிருப்பில், என்எல்சி நிறுவனத்துக்காக தங்களது வீடு, நிலங்களை வழங்கியவா்கள் திரளானோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த சில நாள்களாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:
இந்திரா நகா் ஊராட்சியில் பி2 பிளாக் மாற்றுக் குடியிருப்பில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள பகுதி 1, பகுதி 2-இல் ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து, 6 வீடுகளுக்கு ஒரு குழாய் வீதம் அமைத்து என்எல்சி நிறுவனம் குடிநீா் விநியோகம் செய்து வருகிறது.
கடந்த 2 நாள்களுக்கு முன்னா் ஆழ்துளை கிணற்றிலிருந்த மின் மோட்டாா் பழுதடைந்ததால் குழாய்களில் குடிநீா் வரவில்லை. என்எல்சி நிா்வாகம் வாகனங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்தபோதும் அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே, என்எல்சி நிா்வாகம் ஒரு நாளைக்கு 2 வேளை தண்ணீா் வழங்க வேண்டும். மேலும், ஆள்துளை கிணற்றில் தரமான மின்மோட்டாா் பொருத்தி தடையின்றி தண்ணீா் கிடைக்கவும், வீடுகளுக்கு கூடுதலாக குடிநீா் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...