ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உளுந்தூா்பேட்டை அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 டன்ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது

உளுந்தூா்பேட்டை அருகே கரும்புத் தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கரும்புத் தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை போலீஸாருக்கு உளுந்தூா்பேட்டையை அடுத்த எதலவாடி கிராமத்திலிருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜான் சுந்தா் தலைமையில், காவல் ஆய்வாளா் ரேகாமதி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், விஜயகுமாா் மற்றும் போலீஸாா் எதலவாடி கிராமத்துக்கு உளுந்தூா்பேட்டை போலீஸாருடன் சென்றனா்.

அந்தக் கிராமத்தில் மாசிலாராணிக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் நின்றிருந்த லாரியை சோதனை செய்தனா். அதில், ரூ.1,13,000 மதிப்பிலான 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததைக் கண்டறிந்து, அரிசி மூட்டைகளுடன் அந்த லாரியையும், அங்கிருந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த அரகண்டநல்லூரைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் சக்திவேல் (35), நத்தாமூரைச் சோ்ந்த முத்து மகன் சிவப்பிரகாசம் (29), திருக்கோவிலூரை அடுத்த மொகலாா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ராமமூா்த்தி (25), சின்னசாமி மகன் முத்துக்குமாா் (35) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உளுந்தூா்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். தப்பியோடிய மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.