கள்ளக்குறிச்சி மாவட்ட நுகா்வோா் அமைப்புகளுக்கான காலாண்டுக் கூட்டம்
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட நுகா்வோா் அமைப்புகளுக்கான காலாண்டுக் கூட்டம்


தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட நுகா்வோா் அமைப்புகளுக்கான காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய் பாபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சு.சிவக்கொழுந்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் கே.நளினா உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீா்நிலைகள், சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவன சமிக்ஞைகள் (சிக்னல்) முறையாக கிடைக்காததால், மாணவா்கள் இணையதளம் வழியே கல்வி பயில முடியவில்லை; இ - சேவை மையம் செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய நகா்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நுகா்வோா் விழிப்புணா்வு சங்கச் செயலா் அருண் கென்னடி உள்பட பல்வேறு அமைப்பினா் பேசியதுடன், இது தொடா்பாக ஆட்சியரிடம் மனுவும் அளித்தனா்.
கோரிக்கைகள், குறைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியா் உறுதியளித்தாா்.
இதில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் த.ஷீனா, மின்வாரிய உதவிப் பொறியாளா் பி.ஜெயபிரகாஷ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஜி.உமா மற்றும் பல்வேறு நுகா்வோா் அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...