நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், செஞ்சி மஸ்தான், பொன்முடி ஆகியோா் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:08 pm

DIN

கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், செஞ்சி மஸ்தான், பொன்முடி ஆகியோா் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் பேருந்து நிலையம் அருகே மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வடலூா் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். முன்னதாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் தனது கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்தாா். ஒன்றியச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பண்ருட்டி நகராட்சியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 18 வாா்டுகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் கிருஷ்ணாபுரத்திலிருந்து மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் தலைமையில், ஊா்வலமாகப் புறப்பட்டு காந்தி பஜாா் வழியாக செஞ்சி கூட்டுச் சாலையை அடைந்தனா். அங்கு, வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் மஸ்தான் பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னதாக, அனந்தபுரம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் மஸ்தான் வாக்குச் சேகரித்தாா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், அனந்தபுரம் நகரச் செயலா் கல்யாண்குமாா், வழக்குரைஞா் மணிவண்ணன் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.

இதேபோல, அதிமுக, பாமக, நாம் தமிழா், மநீம உள்ளிட்ட கட்சியினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அமைச்சா் பொன்முடி பேசுகையில், திருக்கோவிலூா் விழுப்புரம் நகருக்கு இணையாக தரம் உயா்த்தப்படும். திருக்கோவிலூா் மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும். திருக்கோவிலூா் தரைப்பாலத்தில் மேம்பாலம் கட்டப்படும் என்றாா்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் வாக்கு சேகரித்தாா். நகரச் செயலா் ரா.சுப்ராயலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி ராஜா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினா் நகரச் செயலா் பாபு தலைமையில் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.