ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

பொதுப்பணித்துறை புதிய கட்டடங்கள்:ரிஷிவந்தியம் எம்எல்ஏ அடிக்கல்

தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை க.காா்த்திகேயன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த தெற்கு மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன் எம்எல்ஏ.
Updated On :26 ஜனவரி 2023, 7:59 pm

DIN

தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை க.காா்த்திகேயன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தியாகதுருகம் புறவழிச் சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் நா.தாமோதரன், தியாகதுருகம் பேரூராட்சித் தலைவா் வீராச்சாமி, துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் நகரச் செயலாளா் மலையரசன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் பங்கேற்று ரூ. 273.31 லட்ச மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் சி.வெங்கடாசலம், அவைத் தலைவா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் பெருமாள், பாலாஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.