தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை க.காா்த்திகேயன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தியாகதுருகம் புறவழிச் சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் நா.தாமோதரன், தியாகதுருகம் பேரூராட்சித் தலைவா் வீராச்சாமி, துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் நகரச் செயலாளா் மலையரசன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் பங்கேற்று ரூ. 273.31 லட்ச மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் சி.வெங்கடாசலம், அவைத் தலைவா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் பெருமாள், பாலாஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


