ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

திமுக வேட்பாளா் பிரசாரம்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசன் தியாகதுருகம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து விருகாவூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த க.காா்த்திகேயன் எம்எல்ஏ.

Updated On :15 ஏப்ரல் 2024, 8:07 pm

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசன் தியாகதுருகம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட குரூா் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா் முடியனூா், விருகாவூா், கனங்கூா், அசகளத்தூா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவரை மேளதாளம் முழங்க, மலா்களை தூவி பொதுமக்கள் வரவேற்றனா்.

திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், விசிக மாவட்ட செயலா் இரா.மதியழகன், தியாகதுருகம் ஒன்றிய செயலா்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, தியாகதுருகம் ஒன்றியக்குழுத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.